Top Story 1உள்நாட்டு செய்திகள்

தொடரும் முடக்கங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நான்கு மாவட்டங்களில், பொலிஸ் அதிகார பிரிவு ஒன்றும், ஏழு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று காலை 6 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின், பிலியந்தலை பொலிஸ் அதிகார பிரிவும், களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தெற்கு பொலிஸ் அதிகார பிரிவின், வலான வடக்கு, வேகட வடக்கு, கிரிபேரிய மற்றும் மாலமுல்ல கிழக்கு முதலான கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின், திருகோணமலை பொலிஸ் அதிகார பிரிவின், உவர்மலை கிராம சேவகர் பிரிவு, உப்புவெளி காவல்துறை அதிகார பிரிவின் அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின், வலப்பனை காவல்துறை அதிகார பிரிவின், நில்தண்டாஹின்ன கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

சட்டத்தை மீறுவோரை பிடியாணை இன்றி கைது செய்ய நடவடிக்கை

wpengine

20வது திருத்தச் சட்டமூலம் குறித்து ஆராய மஹிந்த தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டணிகள் இன்று கூடுகிறது…

wpengine

சமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி

wpengine