உள்நாட்டு செய்திகள்

தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்



இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் இன்று(14) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

தமது விடுதலை குறித்த கோரிக்கையை முன்வைத்தே இவர்கள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி கொழும்பு மெகசின் சிறைச்சாலை, அனுராதபுரம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் களுத்துறை ஆகிய சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளே இவ்வாறு போராடி வருகின்றனர்.

இதேவேளை இவர்களின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரி போராட்டம் ஒன்று இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன் மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில்

wpengine

இலங்கை சிறார்களுக்கு நிலவும் மனித உரிமைகளின் நிலவரங்கள் தொடர்பில் ஆய்வு…

wpengine

மே.தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சிமொன்ஸ் அதிரடியாக நீக்கம்..

wpengine