உள்நாட்டு செய்திகள்

தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன…



தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சீ.டீ. விக்ரமரத்ன நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் அதேவேளை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய காமினி நவரத்ன அண்மையில் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை – பாகிஸ்தான் – மாலைத்தீவு கூட்டு இராணுவப்பயிற்சி

wpengine

பரீட்சைகள் திணைக்கள நடவடிக்கைகள் Online இல்

wpengine

சுங்க தலைமையகத்தின் இறக்குமதி பிரிவு அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில்

wpengine