உள்நாட்டு செய்திகள்

தேர்தல் பிரசாரங்களில் மைத்ரி – மஹிந்த படங்களை பிரசுரிக்க – சந்திரிக்கா



தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

மாவட்ட மட்டத்தில் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும்,மக்களை கவர்ந்து கொள்வதற்காக மைத்திரியும் மஹிந்தவும் இணைந்திருக்கும் படங்களை தேவையென்றால் பயன்படுத்திக் கொள்ள முடியும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேல் மாகாணம் உள்ளிட்ட சில மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக மேடைகளில் ஏறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவை விமர்சனம் செய்து வரும் சந்திரிக்கா அவரது படத்தைப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கியது இங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டபம் உள்ளிட்ட பகுதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று

wpengine

எந்தவொரு தரப்பினரும் தனக்கு அறிவிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவிப்பு..

wpengine