உள்நாட்டு செய்திகள்

தேர்தல் கடமைகளை கண்காணிக்க பொலிஸ்மா அதிபரின் பயணம்



பொலிஸாரின் தேர்தல் கடமைகளை கண்காணிப்பதற்கு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நாடு முழுவதிலும் பயணம் செய்யவுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தேர்தல் காலத்தில் எவ்வாறு கடமையாற்ற வேண்டும் என்பது குறித்து பொலிஸ் மா அதிபர், பிராந்தியங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

உரிய முறையில் சட்டத்தை அமுல்படுத்தாத அதிகாரிகள் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

முதல் கட்டமாக பொலிஸ் மா அதிபர் இளங்கக்கோன், மத்திய மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் பொலிஸ் தலைமையகத்தில் தேர்தல் செயலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

(riz)

 

 

Related posts

உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக மூன்று வழக்குகள்

wpengine

புலி வேட்டையின் உண்மை நோக்கத்தினை கூறினார் பாதுகாப்பு செயலாளர்

wpengine

கொழும்பு மொனோ ரயில் சேவைகள் ஆரம்பம்… – சிங்கப்பூர் முறைமை இப்படித்தான்… (VIDEO)

wpengine