உள்நாட்டு செய்திகள்

தேர்தலுக்கு 70 கட்சிகள் தகுதி…- மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்..



ஜனவரி மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதோடு 70 கட்சிகள் தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்று ஐ.தே.கட்சியின் பிரதிநிதிகளுக்கு ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனைய கட்சிகளுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மத் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் பிரதித் தேர்தல் ஆணையாளர்களுக்கு விளக்கமளிக்கும் 3 நாள் செயலமர்வொன்று இடம் பெற்றுள்ளதோடு வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான விபரங்களை கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமெனவும் குறிப்படப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக தேவைப்படுகின்ற ஊழியர்களுக்கு எதிர்வரும் டிசம்பரில் தேவையான பயிற்சிகள் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு 1 இலட்சத்து 20 ஆயிரம் உத்தியோகத்தர்கள் தேர்தல் நடவடிக்கைக்கு தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஊடகவியலாளர் லசந்த’வின் பிரேத பரிசோதனைகளில் முரண்பாடு..

wpengine

எதிர்வரும் 23ம் திகதி அவசரமாக பாராளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிப்பு..

wpengine

ஜனாதிபதி தலைமையில் “ஜனாதிபதி ஏற்றுமதி விருது” வழங்கும் விழா.

wpengine