உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் எக்கட்சியில் போட்டியிடுவதென இன்னும் தீர்மானிக்கவில்லை – திஸ்ஸ



எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பல கட்சிகள் தனக்கு அழைப்பு விடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஏற்கனவே சில கட்சிகளுடன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும்,எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றி வந்த திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளித்தமையால், தேர்தல் காலத்திலேயே
சுகாதார அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல் காலத்தில் அமைச்சர் பதவியை லஞ்சமாக பெற்றுக் கொண்டதாகவும், போலி கையொப்பங்களை இட்டதாகவும் தெரிவித்து திஸ்ஸ அத்தநாயக்க மீது வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Related posts

மட்டக்குளிக்கான பிரதான வீதி மூடப்படுகிறது…

wpengine

சர்வதேச விமான நிலையமாக மாறவுள்ள மத்தள விமான நிலையம்

wpengine

சிறுவர் வன்முறை தொடர்பில் 64,000 முறைப்பாடுகள்…

wpengine

8 comments

haleem Jun 22, 2015 at 10:18 am

23 அதாவது நாளை பராளுமன்றம் கலையும் என்ரு ஒரு செய்தியும் வெளிவந்து விட்டது ஆனால் ஏன் இன்னும் யார் போட்டியிடுவது என்ன்று தீர்மானிக்கவில்லை

Nifraz Jun 22, 2015 at 10:21 am

இனும் முடிவு வெளிவரவில்லையே கலையும் நாள் வந்தவுடன் தெரியப்படுத்துவார்கள்

Huzni Jun 22, 2015 at 10:23 am

அவசரப்பட வேண்டாம்

Naleer Jun 22, 2015 at 10:24 am

நேரம் வரும் போது தொரிய வரும்

farzan Jun 22, 2015 at 10:27 am

நடளுமன்றம் கழைபதட்ட்கு முன் தெரியப்படுத்துவார்கள்

farza Jun 22, 2015 at 10:29 am

அப்போ இன்னும் தேர்தல் எப்போது என்பதனை இன்னும் கட்சி முடிவு செய்யவில்லை

Nufail Jun 22, 2015 at 10:31 am

கூட்டங்கள் கூடினாளும் இன்னும் சரியான முடிவு எடுக்கவில்லை

shamil Jun 22, 2015 at 10:33 am

அது எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்பார்கள்

Comments are closed.