உள்நாட்டு செய்திகள்

தேரவாத பிக்குமார் சட்டத்தில் திருத்தம் அவசியம்



தேரவாத பிக்குமார் சட்டம் தருணத்துக்கு அவசியமானது என்று அஸ்கிரிய மகாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததாஸி தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த இந்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் காரணமாக அது சமூகத்தில் பிழையான தோற்றத்தை கொடுத்துள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்குமாறு மூன்று பௌத்த சங்கப்பீடங்களை சேர்ந்த மகாநாயக்கர்களே அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குறித்த சட்டமூலம் பிக்குகளை கட்டுப்படுத்தும் சட்டமூலம் என்றவகையில் ஊடகங்களில் வெளியான தகவல்களே பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளன.

எனவே இந்த சட்டமூலத்தின் அம்சங்களை திருத்தி மீண்டும் அரசாங்கத்திடம் அஸகிரிய பீடம் சமர்ப்பிக்கும் என்று மகாநாயக்கர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் 7 பேர் அடையாளம்

wpengine

புகையிரத சேவைகளில் தாமதம்…

wpengine

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் பிளவு புதிய GMOA விரைவில் உருவாக்கம்..

wpengine