உள்நாட்டு செய்திகள்

தேயிலைக் கொழுந்து பறிப்பில் இலங்கை கின்னஸ் சாதனைக்கு தயார்



தேயிலை கொழுந்து பறித்தல் விடயத்தில் இலங்கை கின்னஸ் சாதனை படைக்க தயாராகி வருகிறது.

இலங்கை சுற்றுலா சபை, ஶ்ரீலங்கா எயார்லைன்ஸ், சிலோன் டீ இணைந்து ஆசிய பசிபிக் உள் பயண பங்காளிகள் (Asia Pacific Onboard Travel (APOT) partners) மாநாட்டின் போது இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் APOT மாநாடு இம்முறையானது  இலங்கையில் இடம்பெறவுள்ளது.

ஆயிரம் தொழிலாளர்களை ஒரு இடத்திற்கு அழைத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிகளவு கொழுந்தை பறித்து கின்னஸ் சாதனை படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

‘தேயிலை கொழுந்து பறிப்பதில் கின்னஸ் சாதனை முயற்சி’ என்ற இந்த நிகழ்வு ஓகஸ்ட் மாதம் 30ம் திகதி நுவரெலியாவில் இடம்பெறவுள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் இலங்கை தேயிலையின் தரத்தை உலகிற்கு எடுத்துரைக்கவும் இது சிறந்த தருணமாக அமையும் என இலங்கை சுற்றுலா சபையின் தலைவர் ரொஹாந்த அத்துகொரல தெரிவித்துள்ளார்.

Related posts

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மரண தண்டனைக் கைதிகள்

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு

wpengine

பத்தரமுல்லை பிரதேசத்திற்கு மின்வெட்டு…

wpengine