உள்நாட்டு செய்திகள்வணிகம்

தேனீர் விலையும் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒரு கிலோ சீனியின் விலை 200 ரூபாவை கடந்துள்ள நிலையில், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, எதிர்வரும் நாட்களில் சீனியின் விலை மேலும் உயரக்கூடும் எனவும், இதனால் கேக் ஒரு கிலோவின் விலையை 150 ரூபாவால் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீனி, பால்மா, முட்டை, உருளை கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான விலைகள் அதிகரித்துள்ளமை, தற்போது பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வத்தளையில் நபரொருவர் வெட்டிகொலை

wpengine

மதூஷ் மற்றும் கஞ்சிப்பானி இம்ரானின் நெருக்கமான சகா CCD இனால் கைது

wpengine

இன்று மழையுடன் கூடிய காலநிலை

wpengine