உள்நாட்டு செய்திகள்

தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டு வெடிப்பு – மேலும் 8 குண்டுகள் மீட்பு…



மட்டக்களப்பு – காத்தான்குடியைத் தலைமையகமாகக் கொண்டி இயங்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று(12) இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(12) அதிகாலை 3.50 மணியளவில் புதிய காத்தான்குடி 6இல் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த 02 குண்டுகள் வெடித்துள்ள நிலையில் மேலும் வெடிக்காத 08 நேரக் கணிப்புக் குண்டுகள் மீட்கப்பட்டதாக கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது காத்தான்குடி நகர சபைக்காகப் போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அங்கு 5,815 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

#rishma

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine

சாலாவ மக்களின் நிவாரணங்களுக்கு பின்பே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் – பிரதமர்

wpengine

ஜூட் ஷ்ரமந்தவுக்கு மைத்ரி வழங்கிய மன்னிப்பு அரசியலமைப்பை மீறும் செயல் – உயர் நீதிமன்றம்..!

wpengine