உலக செய்திகள்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் நீக்கம்.. புதிய ஆலோசகர் நியமிப்பு…



அமெரிக்காவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஹெச்.ஆர். மெக்மாஸ்டரை அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார்.

அவருக்குப் பதிலாக, ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஜான் போல்ட்டன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச விவகாரங்களில் தனது கொள்கைக்கு எதிரான கருத்து கொண்டவர்களை முக்கியப் பதவியிலிருந்து வெளியேற்றும் டிரம்ப்பின் அதிரடி முடிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.

டிரம்புக்கும், மெக்மாஸ்டருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை மெக்மாஸ்டர் ராஜினாமா செய்து விட்டதாக கடந்த வாரமே தகவல்கள் வெளியாகின.

எனினும், இந்தத் தகவலை மறுத்ததுடன், தேசியப் பாதுகாப்பு கவுன்சிலில் எந்தவித மாற்றமும் இருக்காது என அதிபர் மாளிகை திட்டவட்டமாக மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏவுகணை இல்லாத ராணுவ அணிவகுப்பு – பாராட்டி நன்றி தெரிவித்த டொனால்ட் டிரம்ப்…

wpengine

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு ஆரம்பம்…

wpengine

கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ

wpengine