உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுவதற்கான சுற்று நிருபம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

கல்வித் துறையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் இதற்கான யோசனைகளை வழங்குவதற்கு விசேட செயலணி ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலவசக் கல்வித் துறையில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தற்சமயம் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை ஆயிரம் வரை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

96வது சர்வதேச கூட்டுறவு தினத்தை மட்டக்களப்பில் கொண்டாட முடிவு!

wpengine

நாமல் உள்ளிட்ட 3 பிரதிவாதிகளுக்கு கொழும்பு நீதிமன்றம் பிணையில் செல்ல உத்தரவு..

wpengine

ரிஷாட், பொலிஸ்மா அதிபரிடம் விடுத்த கோரிக்கை

wpengine