உள்நாட்டு செய்திகள்

தேசிய சம்பள ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு…


அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாட்டை நீக்கி தேசிய சம்பள கொள்கை ஒன்றை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்படவுள்ளன,

நாளை(27) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுக்கிறது.

மேலும், இந்த ஆணைக்குழுக்கு 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அரச நிர்வாக சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியான எஸ்.ரணுக்கே இதன் தலைவராக செயற்படுகிறார்.

மொத்த அரச கட்டமைப்பையும் மதிப்பீடு செய்து புதிய சம்பள கட்டமைப்பை தயாரிப்பதே ஆணைக்குழுவின் நோக்கமாகும்.

இது தொடர்பாக ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு நாளை தெளிவுபடுத்தப்படவுள்ளது.

Related posts

புதிதாக எரிபொருள் நிறுவனம் உருவாக்க அனுமதி

wpengine

பாதுகாப்பு காரணங்களுக்காக சிங்கள ராவய பிக்குகள் மஹர சிறைக்கு இடமாற்றம்

wpengine

தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மதவாச்சிய – இகிரிகொல்லேவ பகுதியில் வைத்து ஒருவர் கைது..

wpengine