உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்…



இராணுவ வீரர்களை நினைவு கூரும் தேசிய இராணுவ வீரர நினைவு தின நிகழ்வு பத்தரமுல்ல இராணுவ வீரர்கள் நினைவு தூபிக்கு அருகில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய கொண்டாட்ட நிகழ்வுக்கு அமைவாக முப்படைகளை சேர்ந்த 50 அதிகாரிகள் சேவா விபுஷண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவம் ஒழுங்கு செய்துள்ள மின் ஒளி பூஜை இன்று மாலை ஆறு மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இராணுவ வீரர்களின் நலனுக்காக அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை அமுல்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து சென்று அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நிறைவேற்ற வேண்டிய சகலவிதமான தேவைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

Related posts

தற்போதைய அரசாங்கத்தை 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்தும் நடத்திச்செல்ல இணக்கம்..

wpengine

50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று…

wpengine

சொய்சாபுர உணவக தாக்குதல் – சந்தேக நபருக்கு விளக்கமறியல்

wpengine