Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேசபந்து தொடர்பான விசாரணை குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்துள்ள அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க பொலிஸ் விசாரணைக் குழுவொன்றைப் பரிந்துரைக்குமாறு, விசாரணைக் குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

குறித்த விசாரணைக்குழு இரண்டாவது தடவையாக இன்றையதினம் (25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

அத்துடன், இந்தக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோர் சட்டமாஅதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்கால விசாரணைச் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரை எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பது தொடர்பில் இன்றையதினம் கூடிய விசாரணைக்குழு கலந்துரையாடியது.

எதிர்கால நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்கு எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கும் இக்குழு முடிவு செய்துள்ளது.

Related posts

ICC இனது துடுப்பாட்ட தரவரிசைப் பட்டியலில் கோஹ்லி இனை பின்தள்ளி ஸ்மித் முன்னிலையில்…

wpengine

கரையொதுங்கிய கழிவுப்பொருட்கள் தொடர்பில் இன்று பரிசோதனை…

wpengine

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்…

wpengine