வாழ்க்கை

தேங்காய் மீன் வறுவல்…



மீன், தேங்காய் சேர்த்து சூப்பரான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வஞ்சிர மீன் – 250 கிராம்
சோளமா – 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிதளவு
பூண்டு விழுது – 1/4 ஸ்பூன்
எலுமிச்சை பழம் – பாதி
மிளகு பொடி – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய் துருவல் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

இந்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.

அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி…

Related posts

பல் கூச்சத்தினை எளிய முறையில் போக்குவது எப்படி?

wpengine

சீக்கிரமா வெள்ளையாக க்ரீம் யூஸ் பண்ணுறீங்களா? அப்போ கட்டாயம் இது உங்களுக்குத் தான்…

wpengine

கீழே எறியும் பொருட்கள் மூலம் பளிச்சிடும் சருமத்தை பெறுவது எப்படி?

wpengine