Top Story 2உள்நாட்டு செய்திகள்

தேங்காய் எண்ணெய் மாதிரிகள் அனைத்தும் தரமற்றவை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை என இலங்கை தரச்சான்றுகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவற்றை முழுமையாக நிராகரிப்பதாகவும் இலங்கை தரச்சான்று நிறுவகம் தெரிவித்துள்ளது.

எனவே, தரச்சான்று நிறுவகத்தின் பரிசோதனைகள் நிறைவடையும் வரையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் வசமிருந்த தேங்காய் எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்யவும் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பாதிக்கப்பட்ட 12 இலட்சம் பேருக்கும் உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டம் ஆரம்பம்

wpengine

ரூ.79 மில்லியன் பெறுமதியான ‘ஐஸ்’ கைப்பற்றல்

wpengine

இலங்கை பொருளாதார நெருக்கடி: “மற்ற ஆசிய நாடுகளுக்கான பாடம்” – மகாதீர் மொஹம்மத்

wpengine