உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தெஹிவளை பகுதியில் வீடொன்றில் எரிந்த நிலையில் சடலங்கள்



தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மின்சாரம் தாக்கியதில் இவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களும் ஒரு ஆணும் என காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்று காலை 10 மணியாளவில் தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தெஹிவளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

ஹுங்கம துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் அதிக மீன்பிடிப் படகுகள் தீக்கிரை

wpengine

இரு ரயில்கள் மோதி விபத்து

wpengine

மேலும் 184 கொரோனா தொற்றாளர்கள்

wpengine