வணிகம்

தெற்காசிய எல்லைக்குள் விசா இன்றி பயணிக்க வாய்ப்பு…



தெற்காசிய எல்லைக்குள் விசா இன்றி விமான பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் பரீசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சார்க் எல்லை சட்டம் மற்றும் ஒழுங்கு உள்துறை அமைச்சர்களின் மாநாட்டு அமர்வுகள் நேற்று(13) கொழும்பு, காலி முகத்திடல் ஹோட்டலில் இடம் பெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குறித்த இந்த அமர்வுகள் இடம்பெற்றது.

எல்லை ரீதியில் முகம் கொடுக்கப்படும் பயங்கரவாத பிரச்சினை போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதம் கடத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக எல்லை என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் இங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை தெற்காசிய எல்லைக்குள் பொது விசா அற்ற பயணங்களை அறிமுகப்படுத்தி வைப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

குளிரூட்டப்பட்ட தேங்காய்கள் இறக்குமதி

wpengine

வெல்லம்பிட்டிய மக்களின் சுகாதார நலனினை கருத்திற் கொண்டு சிலாபம் சித்தாரா வைத்தியசாலையின் மற்றுமொரு சேவை

wpengine

JAT இன் புத்தாக்கமான தயாரிப்புகளில் புதிய உள்ளடக்கமாக Master Plaster அறிமுகம்

wpengine