உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தெரிவுக்குழுவில் பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் முன்னிலை



(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இன்ற(04) பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் முன்னிலையாகவுள்ளனர்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக டி சில்வா ஆகியோர் இன்று(04) தெரிவுக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று இடம்பெறவுள்ள தெரிவுக்குழுவின் விசாரணைகளில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 29ஆம் திகதி கூடிய இந்த தெரிவுக்குழு விசாரணைகள் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் ஆகியோர் அன்றைய தினம் சாட்சி வழங்கியிருந்தனர்.

Related posts

ஹம்பாந்தோட்டை பிரதேச ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 28 பேரும் விளக்கமறியலில்..

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டார வீதிக்கு பூட்டு

wpengine

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அரசு அனுதி..

wpengine