உள்நாட்டு செய்திகள்

தெரனியாகல முன்னாள் பிரதேச சபை தலைவர் சம்பிக்க விஜேசிங்கவுக்கு 24 வருட கடூழிய சிறைத்தண்டனை



(FASTNEWS | COLOMBO) – அவிசாவளை – தெரணியகல நூரி தோட்டத்தின் முகாமையாளர் நிஹால் பெரேரா கொலை சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்படிருந்த தெரனியாகல பிரதேசசபை முன்னாள் தலைவரான சம்பிக்க விஜேசிங்க எனும் அத்த கொட்டா 05 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் இன்று(05) குற்றாவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, குற்றவாளிக்கு 24 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று(05) கொழும்பு மேலதிக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், குற்றவாளிக்கு 20000 ரூபா அபராதமும், இலஞ்சம் கோரிய நபருக்கு 25000 ரூபாவும், மேலும் 04 இலட்ச அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த அபராதத் தொகை செலுத்தப்படாதவிடத்து மேலதிக 07 வருட சிறைத்தண்டனை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

இறுக்கமாகும் பணிப்புறக்கணிப்பு

wpengine

வர்த்தகர்கள் தொடர்பில் முறையிட புதிய இல.அறிமுகம்

wpengine

பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் பங்குகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அணி ஒன்று கூடல்

wpengine