உள்நாட்டு செய்திகள்

தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | தெரணியகலை) – கேகாலை மாவட்ட தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

தேசிய நீர்வழங்கல் சபைக்கு சொந்தமான 477 நீர்மாணிகள் திருடப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட 98 நீர்மாணிகள், தெரணியகலை பிரதேச சபை தவிசாளரின் பொறுப்பிலிருந்த நிலையில், நேற்று(16) கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

wpengine

தோல்விக்கான பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.. – சந்திமால் தெரிவிப்பு..

wpengine

காஞ்சிபான இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த கோரிக்கை

wpengine