உள்நாட்டு செய்திகள்

தென் மாகாண சபையில் அமளிதுமளி – சபை அமர்வுகள் எதிர்வரும் 8ம் திகதி வரை ஒத்திவைப்பு



தென் மாகாண சபை அமைச்சர் டீ.வி.உபுலை அப்பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு வௌியிடும் வகையில் சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று இன்று கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பை வௌியிட்டமையால் சபை அமர்வுகள் எதிர்வரும் 8ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கறுப்புப் பட்டி அணிந்து வந்தவர்கள், மாகாண சபை செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் செயப்பட்டதால், சபையை ஒத்திவைக்க அதன் தலைவர் சோமவங்க கோதாகொட தீர்மானித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென் மாகாண சபையின் உறுப்பினர் டீ.வி.உபுல் வசம் இருந்த மீன் பிடி உள்ளிட்ட சில அமைச்சுக்களை எச்.டப்ளியூ.குணசேனவிடம் கையளிக்க, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எனக்கு அழிவில்லை – மைதானத்தில் குமுறிய உசேன் போல்ட்

wpengine

மே தினப் பேரணி மற்றும் கூட்டங்களை மே 01ம் திகதியே நடாத்த தொழிற்சங்கங்கள் தீர்மனம்…

wpengine

புதிய கட்சியில் அங்கத்துவம் பெற்றால் சுதந்திரக் கட்சி அங்கத்துவம் ரத்தாகும்.

wpengine