Top Story 1உலக செய்திகள்

தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்ய உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதியை யுன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்ய சியோல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தை தவிர்த்த குற்றச்சாட்டின் பேரில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கொரிய ஜனாதிபதி, நாட்டில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தும் தீர்மானத்திற்காக அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டு பதவியை இழந்தார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனவரி 6 ஆம் திகதிக்கு முன்னர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சியோல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related posts

மதுவரி அனுமதிப் பத்திரம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

wpengine

‘நாம் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த காணிகளில் ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன’ – ரிஷாட் எம்.பி குற்றச்சாட்டு!

wpengine

வானுட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

wpengine