உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தென் ஆப்ரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை தடுமாற்றம்…



தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்சில் அடுத்தடுத்ததாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் 26ம் திகதி போர்ட் எலிசபெத் மைதானத்தில் தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 286 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 181 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

தற்போது, தனஞ்சய டி சில்வா 43 ஓட்டங்களுடனும், சமீர 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். தென்னாபிரிக்க அணி சார்பில் பில்லென்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related posts

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவர் கொலை…

wpengine

வாக்குகளை எண்ணுவது மற்றும் ஆசன பகிர்வீடு பற்றி தேர்தல் ஆணையகம் விளக்கம்…

wpengine

மஹிந்த ஜோன்ஸ்டன் பயணித்த வாகனம் மீது, விழுந்த தடுப்பு படலை விழுந்து விபத்து – விசாரணை தீவிரம்..!

wpengine