உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் பொதுத்தேர்தல்…



(FASTNEWS-SOUTH AFRICA) தென் ஆப்பிரிக்காவில் எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை 1994ம் ஆண்டு முடிவுற்ற பிறகு, ஜனநாயகப்பூர்வமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பாராளுமன்ற கீழ் சபையில் (தேசிய சபை) பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்

அந்தவகையில், மே 8-ம் திகதி பொதுத்தேர்தல் (தேசிய சபை தேர்தல்) நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தேசிய சபை கலைக்கப்பட்டது. அதன்பின்னர் தேர்தல் நடைமுறைகள் தொடங்கி யுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைக்கு ஈரான் அதிருப்தி

wpengine

மீண்டும் ISIS தாக்குதல் நடக்கலாம்

wpengine

அமெரிக்க அதிபர் – வடகொரிய அதிபர் சந்திப்பு இம்மாத இறுதியில்…

wpengine