உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் அதிபர் பதவியில் இருந்து விலக ஜேக்கப் ஷூமா மறுப்பு…



தென் ஆப்பிரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஜேக்கப் ஷூமா அதிபர் பதவியிலிருந்து விலக மறுப்பு தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக ஜேக்கப்ஷூமா(75). கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பதவிவகித்து வருகிறார். இவர்மீது ஊழல் புகார்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவின் உயர் நீதிமன்றம் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது. சமீபத்தில் இந்தியரான குப்தா குடும்பத்துடன் இணைந்து ஜேக்கப் ஷூமா ஊழல் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டதை இருவரும் மறுத்துள்ளனர்.

இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கும் ஷூமா மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அவருக்கு ஆளும் ‘ஏ.என்.சி’ கட்சி எம்.பி.க்களும் எதிராக உள்ளனர். எனவே அவர் வாக்கெடுப்பில் தோல்வி அடையும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே அவர் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும் ‘ஏ.என்.சி’ கட்சி வலியுறுத்தியது. ஆனால் பதவி விலக அவர் மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே அவரை சமாதானம் செய்து பதவி விலக செய்ய கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதுடன் மூத்த நிர்வாகிகளை ‘ஷூமா’ வீட்டுக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

கொரோனா வைரஸ் – இந்தியாவில் முதல் உயிரிழப்பு

wpengine

ஈரான் – ஈராக் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு…

wpengine

சவூதி உடன் இராஜதந்திர உறவுகளை, வலுப்படுத்துகிறது அமெரிக்கா…

wpengine