விளையாட்டு

தென்னாபிரிக்காவுடனான  கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – கொ​ரோனா தொற்று காரணமாக தென்னாபிரிக்காவுடனான  கிரிக்கெட் போட்டியை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் எதிவரும் ஜூன் மாதம் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் நடைபெற இருந்தது.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த போட்டி தொடர் ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த தீர்மானம் இருநாட்டு கிரிகெட் சபைகள் இனைந்து எடுத்துள்ளதாக அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு அழைப்பு

wpengine

பணத்திற்காக ஆடுகளத்தை மாற்றிய சம்பவம் தொடர்பில் விசாரணை – ICC…

wpengine

பிரெஞ்ச் டென்னிஸ் போட்டித் தொடர்கள் செப்டம்பர் மாத பிற்பகுதியில்

wpengine