உள்நாட்டு செய்திகள்

தூய்மையான அரசியல் வாதியினை எமது நாட்டில் கண்டுபிடிக்கலாமா – துமிந்த



ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பலருக்கு வேட்புமனு கிடைத்தன. எனினும் தனக்கு இதுவரையில் நிரூபிக்க முடியாத குற்றசாட்டுக்களே உள்ளன என கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சுமத்தப்படாத அரசியல்வாதிகளை எங்கள் நாட்டில் கண்டு பிடிப்பது இலகுவான ஒன்றா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தனக்கு வேட்புமனு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியும் அதனை வழங்கவில்லை என்றால், தனக்கு எதிராக ஏதேனும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதனாலே என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மூன்று தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிட்டு பாரியளவிலான வெற்றியினை பெற்றுக்கொடுத்தது தான் என அவர் கூறியுள்ளார்.

எனினும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டமையினால் தனது வாக்காளர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு அல்லது வேறு எந்த கட்சிக்கும் வாக்களிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(riz)

 

Related posts

இலங்கையின் அபிவிருத்தியை நடைமுறைப்படுத்த ஜப்பானிடமிருந்து சலுகைக்கடன்

wpengine

ஊரடங்கு தொடர்பிலான மற்றுமொரு அறிவித்தல்

wpengine

சிராந்தி, யோசிதவிடம் தாஜூடின் கொலை பற்றிய விசாரணை நாளை

wpengine