உள்நாட்டு செய்திகள்

துறைமுக நுழைவாயிலின் அருகாமையில் தீவிர நிலைமை



கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலில், அதன் பணியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் நேற்றையதினம் மேலும் நான்கு பணியாளர்கள் இணைந்து கொண்டனர்.

மூன்று பணியாளர்கள் கடந்த ஆறு தினங்களாக இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை நேற்று முதல் ஏழாக அதிகரித்துள்ளது.

துறைமுகங்கள் விவகார அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை பதவி நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு ஆதரவு தெரிவித்து நேற்றையதினம் துறைமுக ஊழியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, துறைமுகத்தின் நுழைவாயிலின் அருகாமையில் இன்று காலை தீவிர நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 774

wpengine

அமைச்சர்களின் அரச வாகனங்களுக்கு கட்டண முறை

wpengine

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரச தொழிற்சங்க ஒன்றியம்…

wpengine