உலக செய்திகள்

துருக்கியின் கிரீக் தீவுகளில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்..



துருக்கியின் கிரீக் தீவுகளில் நள்ளிரவில் ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவான நிலநடுக்கத்தால் ஒருவர் பலியாகியுள்ளதோடு, மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள கிரீக் தீவுகளின் லெஸ்போஸ், சியாஸ் மற்றும் ஏஜியன் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால் அதிக பாதிப்புக்குள்ளான வ்ரிஷா மாவட்டத்தில் உள்ள லெஸ்பாஸ் கிராமத்தில் பல வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதில் 7 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கியிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக லெஸ்பாஸ் மேயர் ஸ்பைரோஸ் கலினோஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் வ்ரிஷாவில் இருந்து பெறப்பட்ட வீடியோ பதிவு ஒன்றில், ஒரு மாடி மற்றும் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டிடங்கள் பல இடிந்து சாலைகளை ஆக்கிரமித்துள்ளது தெரியவந்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இராணுவம் விரைந்துள்ளது. மூன்று தேவாலயங்கள் மற்றும் பல கடைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக துருக்கியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப்ளோமரியின் தெற்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

(rizmira)

Related posts

கடும் மழை, வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழப்பு…

wpengine

பாரிசில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல் – 7 பேர் காயம்…

wpengine

நேற்று 11 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தற்கு பகிரமாக இன்று 33 பலஸ்தீன பணயக் கைதிகளை விடுவித்த இஸ்ரேல்..!

wpengine