உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

துமிந்த மன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான சொத்துக்களை வெளிப்படுத்தவில்லை என்று, அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில், குறித்த குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

இன்னும், இது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள மூன்று வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதற்கும் அவர் இன்று(11), கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்தார்.

அவர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, ‘தனது கட்சிக்காரரான துமிந்த சில்வா, குற்றங்களை ஒப்புக்கொண்டு, இக்குறித்த வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர இணக்கம் தெரிவித்துள்ளார்’ என, நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு, எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

762 சிறைக் கைதிகள் விடுதலை…

wpengine

81 அரச பாடசாலைகள் மூட வேண்டிய நிலை – கல்வி அமைச்சர்..!

wpengine

தொண்ணூறு ஆயிரத்தினை கடந்தது

wpengine