உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி மற்றும் கை குண்டுகளுடன் நால்வர் கைது



(FASTNEWS|COLOMBO) – பிலியந்தல – ஹெடிகம பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் கை குண்டுகள் உட்பட பல பொருட்களுடன் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிற்றூந்து ஒன்றினை பரிசோதனை செய்த போது குறித்த வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 200 கிராம் வெடிமருந்தும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் மொரவக, பேலியகொட மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

சர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த வருடம் இலங்கையில்…

wpengine

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை…

wpengine

தபால் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆயத்தம்…

wpengine