ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தீர்மானமிக்க 02வது இருபதுக்கு -20 போட்டி இன்று… – சதீர உள்ளே திக்வெல்ல வெளியே..



(FASTNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு -20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இன்று(22) இலங்கை நேரப்படி இரவு 09.30 சென்ஷூரியன் இல் ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது போட்டியில் விளையாடிய ஏஞ்சலோ பெரேராவுக்கு பதிலாக சதீர சமரவிக்கிரம அணியில் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில் சுப்பர் ஓவரில் தென்னாபிரிக்க 1-0 என்ற கணக்கில் வெற்றியீட்டியது

தென்னாபிரிக்க அணியின் பிரபல வீரர்களான அணியின் தலைவர் பப் டுப்ளசி, குவிண்டன் டி கொக், ககிசோ ரபாடா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் இரண்டாவது போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் அவர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க இந்தியா பயணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுக்கு பதிலாக டிவேன் பிடோரியஸ், க்றிஸ் மோரிஸ் மற்றும் லுதோ சிபம்லா ஆகியோர் தென்னாபிரிக்க அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதோடு, ஜே.பீ.டுமினி அணியின் தலைமைப் பதவியினை பொறுப்பேற்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 11 பேரை கடத்தி கொலை செய்தனர்

wpengine

பங்களாதேஷ் சாதனையின் பின்னால் இலங்கை; சர்ச்சை உலகக்கிண்ணம் (VIDEO)

wpengine

மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கிய உலகின் மிக பெரிய விமானம்!

wpengine