கேளிக்கை

திவ்யதர்ஷினியின் அதிரடி முடிவு…



தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினி என்ற டி.டி பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி.‘காபி வித் டிடி’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.

இவரது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்வதாக கூறப்பட்டது. இந்நிலையில், இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர் என கூறப்படுகிறது.

Related posts

பிரபல நடிகை மீது தாய் புகார்…

wpengine

20 வருடங்களுக்கு பின்னர் நடிகர் கமல் ஹாசன் vs ராணி எலிசபெத் சந்திப்பு… [PHOTOS]

wpengine

பத்திரிகையாளரை மணக்கிறார் பிரபல நடிகை…

wpengine