உள்நாட்டு செய்திகள்

திவிநெகும மோசடி வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பு..



திவிநெகும மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் திவி நெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு உரிய 36.5 மில்லியன் ரூபாய் நிதியை மோசடி செய்தமை தொடர்பிலே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த இந்த வழக்கு இன்று(27) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

 

(rizmira)

Related posts

பா.உ நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு.

wpengine

UPDATE -பெபிலியான சந்தியில் உள்ள ஆடை வர்த்தக நிலையத்தில் தீ.. (PHOTOS)

wpengine

சில பகுதிகளில் ஊரடங்கு தளர்வு

wpengine