உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

திலின கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த பிணை இரத்து (Update)



கொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த பிணை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திருத்த மனுவை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க, பிணையை இரத்துச் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.

 

திலின கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபர் மேல் நீதிமன்றில் வழக்கு

அனுமதிப் பத்திரம் இன்றி யானை குட்டி ஒன்றை தன்வசம் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவுக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்துச் செய்து உத்தரவிடக் கோரி சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த திலின கமகேவை கங்கொடவில நீதவான் கனிஷ்க விஜேரத்ன, 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளில் கடந்த 2 ஆம் திகதி விடுதலை செய்தார்.

எவ்வாறாயினும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்த சட்டமா அதிபர், நீதவான் உத்தரவை செல்லுப்படியற்றதாக்கி, சந்தேகநபரான திலின கமகேவை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

“அணித் தலைமையில் இருந்து விலக இன்றைக்கும் தான் தயார்” – திமுத் கருணாரத்ன..!

wpengine

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது

wpengine

கொரோனாவுக்கு சவாலாகும் இயற்கை

wpengine