உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

திலங்க சுமதிபாலவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் களமிறக்கம்



இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக திலங்க சுமதிபால வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இவர் கிரிக்கெட் நிறுவன தலைவர் பதவியின் பொருட்டே இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திலங்க சுமதிபால, பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகராகவும் கடமையாற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி 13ம் திகதி இடம்பெறவுள்ளதோடு, இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் கடந்த நவம்பர் 24ம் திகதி ஆரம்பமானது.

மேலும் டிசம்பர் 4ம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்.

wpengine

உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை உலகிற்கு எடுத்துரைக்கும் தைப்பொங்கல்

Azeem Kilabdeen

அதிபர் வெற்றிடம் ஜனவரி மாதம் நிரப்பப்படும்

wpengine