உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

UPDATE – திலகரத்ன டில்ஷான் நீதிமன்றில் சரண்..



இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் திலகரட்ன தில்ஷான் நீதிமன்றில் சரணடைவதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டத்தரணியொருவர் மூலம் மோசன் மனுவொன்றை தாக்கல் செய்து நீதிமன்றில் சரணடைவதற்காக அவர் முன்னிலையாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

UPDATE…………. திலகரத்ன டில்ஷானை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்ற பிடியாணை..

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான திலகரத்ன டில்ஷானை கைது செய்து நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

முதல் மனைவியின் பராமரிப்பு வழக்கு குறித்து நேற்று(24) நீதிமன்றில் முன்னிலையாகாமையினாலேயே குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் டில்ஷான் அல்லது அவரது தரப்பில் யாரும் நீதிமன்றில் ஆஜராகாததுடன் டில்ஷான் முதல் மனைவிக்கு எவ்வித பராமரிப்புத் தொகையினையும் வழங்காது தட்டிக் கழிப்பதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.

(rizmira)

Related posts

ஜனாதிபதி தேர்தல் – 2138 முறைப்பாடுகள் பதிவு

wpengine

மாத்தறை – பெலிஅத்தை இடையிலான முதல் ரயில் பயணம் நாளை(05)..

wpengine

மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய 03 பேர் கொண்ட குழு நியமனம்

wpengine