விளையாட்டு

திறமை அடிப்படையில் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க பிசிசிஐ திட்டம்



இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையில் மாற்றம் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் வீரர்களின் திறமை அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது. இம்முறையை பின்பற்ற பிசிசிஐ-யின் நிதிக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ-க்கு நெருக்கமான ஒருவர் தெரிவிக்கையில், “50 ஓவர் உலகக் கோப்பை, உலகக் கோப்பை டி-20, ஐசிசி சாம்பியன் டிராபி போன்ற போட்டிகளில் தற்போது வரை இந்திய வீரர்களுக்கு திருப்திகரமான ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

ஆனால் இனி, உள்ளூர் மற்றும் வெளியூரில் விளையாடுவதற்கேற்ப ஊக்கத் தொகையை வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது’ என்றார்.

உதாரனத்திட்கு உள்ளூரில் இந்திய அணி டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றி பெறுமானால் வீரர்களின் ஆட்டக் கட்டணத்தோடு அவர்களுக்கு குறிப்பிட்ட அளவில் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதுவே வெளிநாடுகளில் என்றால் எதிரணி, வீரர்களின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

(riz)

Related posts

ஸ்மித் – கொஹ்லி சர்ச்சை அவர்களின் தனிப்பட்ட விவகாரம் – அஸ்வின்

wpengine

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு அழைப்பு

wpengine

ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக மீண்டும் கண்டிக்கப்பட்ட ஹசரங்க..!

wpengine