உள்நாட்டு செய்திகள்

திறந்தவெளி மிருகக்காட்சிசாலை வருமானம் 8 மில்லியனை தாண்டிய நிலையில் – தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம்



பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக திறந்தவெளி மிருகக்காட்சிசாலை வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாப் பயணிகளின் வருகையால், 08 மில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ரேணுகா பண்டாரநாயக்க மேலும் குறிப்பிட்டிருந்தார்.

பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் 40 இற்கும் அதிகமான விசேட உயிரினங்களை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாதிப்பும் ஏற்படாத வகையில் எரிபொருள் கையிருப்பைப் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

wpengine

மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை.

wpengine

இறுதிக் கிரியைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு

wpengine