கேளிக்கை

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க கோரிக்கை…


திரையரங்குகளில் படம் திரையிடப்பட முன்னர் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்குமாறு பல தரப்புக்களில் இருந்து கோரிக்கை வந்துள்ளதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமை, நீதிமன்றத்தின் ஊடாக திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்த பின்னர் திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைப்பதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுப்பதாக திரைப்பட கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் எம்.என்.ஆர். அபேவர்தன கூறியுள்ளார்.

இதேவேளை, பாரம்பரிய ரீதியாக சில திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுடன், சில திரையரங்குகளில் அது இடம்பெறுவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

கிறிஸ்டோஃபர் நோலனின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் யூனிவர்ஸல்

wpengine

ஷகீலா எனும் ஓர் கவர்ச்சி நடிகையின், படிக்கப்படாத கண்ணீர் பக்கங்கள்…

wpengine

தன்னை விட 19 வயது குறைந்தவரை மணக்கிறார் உலக அழகி பட்டம் வென்ற பிரபல நடிகை

wpengine