உள்நாட்டு செய்திகள்

திருடர்களை பிடிக்கும் அமைச்சொன்றை கோருகிறார் ரஞ்சன்



புதிய அரசாங்கத்தின் கீழ் திருடர்களை பிடிக்கக் கூடிய அமைச்சு பதவி ஒன்று தனக்கு வழங்கப்பட்டால் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்த செய்தியினை சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 17, 20 கோடி செலவு செய்த வேட்பாளர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

மேலும், ஏனைய வேட்பாளர்கள் பல கோடிகளை செலவிடும் போது நான் தேர்தல் நடவடிக்கைகளுக்காக மூன்று கோடி என்ற சிறிய அளவிலான பணத்தினையே செலவிட்டேன்.

அவ்வாறான சூழ்நிலையிலும் திவுலபிட்டிய மக்கள் எனக்கு 2 லட்சத்து 16 ஆயிரம் என்ற பெரிய அளவிலான வாக்குகளை அளித்துள்ளனர்.

எனக்கு இந்த அளவிற்கு ஆதரவு வழங்கிய மக்களுக்காக சேவை செய்ய கூடிய ஒரு அமைச்சு பதவியை நான் எதிர்பார்க்கின்றேன். திருடர்களை பிடிக்கும் அமைச்சு ஒன்று கிடைத்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(riz)

Related posts

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்;

Azeem Kilabdeen

சஜின் வாஸின் பாதுகாப்பினை உடனடியாக விலக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

wpengine

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உதவுங்கள்

wpengine