வாழ்க்கை

தினமும் 6 பாதாம் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றம்…



6 பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையான பலன் கிடைக்கும்.

பாதாம் உடலுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. விட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், செம்பு, செலினியம் போன்றவை அடங்குகின்றன.

எனினும் பாதாமை அளவோடுதான் சாப்பிடவேண்டும். உடலுக்கு நன்மை சேர்க்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி சாப்பிட்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக உடல் பருமனாகிவிடும்.

நம் உடலுக்கு சராசரியாக 15 மில்லி கிராம் விட்டமின் ஈ சத்து தேவைப்படுகிறது. ஆனால் ஒரு கப் பாதாமில் 25 மில்லி கிராம் விட்டமின் ஈ உள்ளடங்கி இருக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக பாதாம் சாப்பிட்டால் வயிற்று போக்கு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதுபோல் தினமும் உடலுக்கு 10 மில்லி கிராம் மெக்னீசியம் போதுமானது.

அதிக பாதாம் சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்சினையையும் உருவாகும். பாதாமுடன் காரமான உணவு பதார்த்தங்களை சேர்த்து சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலில் நச்சுத்தன்மை உண்டாக வாய்ப்பிருக்கிறது. பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

Related posts

தயிர் தேன் கலவையின் பயன்கள்…

wpengine

எலுமிச்சை பழ தோல் தரும் பலன்கள்…

wpengine

முகத்தில் கூடுதலாக எண்ணெய் வழியுதா?… இதோ அட்டகாசமான டிப்ஸ்…

wpengine