ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

திட்டமிட்டு நகர்த்தப்பட்ட அரசியல் சதுரங்க விளையாட்டும்.. பிணை முறி கொடுக்கல் வாங்கலும்..



நாட்டில் மற்றுமன்றி சர்வதேசத்தினதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் இறுதி அறிக்கையின் விஷேட அறிவிப்பினை நேற்று(03) ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெளியிட்டிருந்தார்.

இலங்கை அரசியலில் ஆட்டம் காட்டுவிக்கும் வகையில் குறித்த இந்த அறிவிப்பு அமையும் என அரசியல் வட்டாரத்தில் பாரிய எதிர்பார்ப்புகள் காணப்பட்டன.

அதன்படி விஷேட அறிவிப்பை வெளியிட்ட மைத்திரி, முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன், முன்னாள் நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோர் குறித்த ஊழலுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

அதேசமயம் மத்திய வங்கி ஆளுநரை நியமித்ததன் பொறுப்பு பிரதமர் ரணிலையே சாரும் எனவும் அவர் அதற்கு பதில் கூறவேண்டும் என்ற வகையிலும் அறிக்கையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயிலும் இந்த விடயத்தில் தொடர்புபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், அதேபோன்று முறைகேடாக ஈட்டப்பட்ட 11,145 மில்லியன் ரூபாவும் மீள பெற்றுக்கொள்ளப்படும் என்ற வகையிலேயே ஜனாதிபதியின் அறிவிப்பு அமைந்தது.

#g-reeshma

Related posts

மதூஷ் குழுவினரின் கைதுடன் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானமை தொடர்பில் டுபாய் பொலிஸ் விசாரணை…

wpengine

 கரப்பந்தாட்டம் விளையாடியவர் மரணம்

wpengine

07 தடவைகள் துபாய் பயணம் – மதூஷ் தொடர்பில் நாமல் அம்பலம்.. (PHOTOS)

wpengine