உள்நாட்டு செய்திகள்

திட்டமிட்டப்படி இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெறும்…



கூட்டு எதிர்க் கட்சியினால் இன்றைய தினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டப் பேரணி திட்டமிட்டபடி இன்று(06) நடைபெறும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குதல் மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குதல் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

எவ்வாறாயினும் ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி இன்று(06) தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னேடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

OIC கூட்டமைப்பில் சிக்கிய இலங்கை

wpengine

ஒருநாள் அணியில் மீண்டும் உமர் அக்மல்..

wpengine

உயர்நீதிமன்ற நீதியரசரின் மனுவை விசாரிக்க மறுப்பு

wpengine