உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

தாய்லாந்து மன்னரின் இறப்பு – ஒரு வருடம் துக்கம் கடைபிடிக்க அறிவுறுத்தல்.


70 ஆண்டுகள் பதவியில் இருந்த தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு ஒரு வருடம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னரின் நல்லடக்கம் நடைபெறும் இன்றைய தினம் (14) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (வயது 88). தனது 18 வயதில், 1946ஆம் ஆண்டு மன்னர் ஆனார்.

70 ஆண்டு காலம் மன்னராக இருந்து, மக்களின் ஏகோபித்த அபிமானத்தையும், அன்பையும் ஒரு சேரப்பெற்றவர். நாட்டை ஒற்றுமைப்படுத்தும் சக்தியாக அவரை மக்கள் நம்பினர்.

சாக்ரி வம்சத்தை சேர்ந்த அவர் ஒன்பதாம் ராமர் என அறியப்பட்டிருந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்நிலையிலேயே சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் 63 வயதான இளவரசர் மகா வஜிரலோங்கோன், நாட்டின் புதிய மன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

“சஹ்ரானை வாழ்நாளில் சந்தித்ததேயில்லை – ஐஎஸ் அமைப்பை அரசு இல்லாதொழிக்க வேண்டும்” – தெரிவுக்குழு முன் ரிஷாட்

wpengine

எசல பெரஹெர ஆகஸ்ட் 02 ஆம் திகதி ஆரம்பம்

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

wpengine