கேளிக்கை

தாய்லாந்தில் “கும்கி 2″..



பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் ‘கும்கி 2’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நேற்று (6) முதல் ஆரம்பமாகியுள்ளது.
இப்படத்தின் நாயகனாக லிங்குசாமியின் மருமகன் மதியும், நாயகியாக நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானியும் நடித்து வருகிறார்கள்.

தாய்லாந்தில் நிறைய யானைகள் உலவும் இடம் என்பதால், அங்கு படத்தின் பிரதான காட்சிகளைப் படமாக்க முடிவு செய்துள்ளார் பிரபு சாலமன்.

‘கும்கி 2’ படத்திற்கான முதற்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்தார் பிரபு சாலமன். இதற்காக தனது படக்குழுவை மாற்றியுள்ளார். இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா மற்றும் ஒளிப்பதிவாளராக சுகுமார் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படத்தை பென் மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

Related posts

செல்லம்மாவுடன் அனிருத் காதல்

wpengine

இந்தியன் 2 வில் ஏ.ஆர்.ரஹ்மான் இடத்தை பிடித்த அனிருத்…

wpengine

பெற்றோருக்காக கன்னித்தன்மையை விற்க தீர்மானித்த 18 வயது யுவதி..

wpengine