ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

“தான் குற்றவாளி அல்ல…” – துபாய் நீதிமன்றில் கதறிய பணிப்பெண்ணுக்கு கடூழிய சிறை….



(FASTGOSSIP | COLOMBO) – இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு துபாய் நீதிமன்றம் ஒன்று 06 மாத காலம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த பெண் பணியாற்றிய வீட்டின் உரிமையாளரின் மோட்டார் வாகனம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குறித்த பணிப்பெண் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தான் இந்த சம்பவத்திற்கான குற்றாவாளி அல்ல என இலங்கை பெண் நீதிமன்றத்தில் கதறி அழுதுள்ள போதிலும், மோட்டார் வாகனத்தில் இருந்து வெளியேறிய புகையை தான் அவதானித்ததாகவும், அதனை தான் அணைக்க முயற்சித்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், எப்படியிருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகிய இலங்கை பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனையும் 5000 டிராம் அபராதம் விதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, சிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர் இலங்கைக்கு நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

facebook ஊடாக ட்ரம்ப் இற்கு ஆதரவளித்தமைக்கு வருந்துகிறோம்.. (Photos)

wpengine

கொச்சிக்கடை குண்டுத் தாக்குதலும் அமெரிக்கா FBI சோதனைகளும்

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியினை சமூக வலைதளங்களில் விமர்சிப்போருக்கு மஹேலவிடம் இருந்து எச்சரிக்கை…

wpengine